\
பேருந்து கட்டணத்தை உயர்த்தியதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

பேருந்து கட்டணத்தை உயர்த்தியதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

பேருந்து கட்டணத்தை உயர்த்தியதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து
Published on: 

தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதில் தவறேதும் இல்லை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டீசல் உள்ளிட்டவைகளின் விலையை கருத்தில் கொண்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளது காலத்தின் கட்டாயம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ 6 ஆண்டுகளாக உயர்த்தப்படாத பேருந்து கட்டணத்தை தற்போது உயர்த்தியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை பேருந்து கட்டணத்தை உயர்த்தியதில் தவறில்லை. காலத்தின் நிலையை கருதி, எரிபொருள் உள்ளிட்டவைகளின் விலையை மனதில் கொண்டு நியாயமான முறையில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதில் தவறில்லை” என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com