இரட்டை இலை விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டுவதா?: பொன்.ராதாகிருஷ்ணன்

இரட்டை இலை விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டுவதா?: பொன்.ராதாகிருஷ்ணன்

இரட்டை இலை விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டுவதா?: பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

இரட்டை இலை விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டுவது தவறு என்றும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜகவின் தேசிய மற்றும் மாநிலத் தலைமை முடிவு செய்யும் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜகவின் தேசிய மற்றும் மாநிலத்தலைமை முடிவு செய்யும் என்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இன்றைய முதல்வரும், அன்றைய வேட்பாளரும் இணைந்து தானே இருந்தனர். அன்றைய வேட்பாளருக்கு அமைச்சர்கள் அனைவரும்தான் வாக்கு சேகரித்தனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com