பாபநாசம் அருகே 4 மணி நேரமாகியும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை..!
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே ஒரு வாக்குச்சாவடியில் 4 மணி நேரம் ஆகியும் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இதனால் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.
தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அருண்மொழிப்பேட்டை வாக்குச்சாவடியில் 4 மணி நேரம் ஆகியும் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இதனால் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர். வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இதனிடையே இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என வாக்காளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.