பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடைநீக்கம்

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடைநீக்கம்

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடைநீக்கம்
Published on

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரியை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி தீவர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அந்தவகையில் நேற்று அவர் பரப்புரைக்காக ஒடிசா மாநிலத்தின் சாம்பல்பூர் சென்றிருந்தார். அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்தும் இந்தச் சோதனை நடைபெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து இச்சோதனை குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் ஒரு நபரை நியமித்தது. அந்த விசாரணைக்குப் பின் தேர்தல் ஆணையம் பிரதமரின் வாகனத்தை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி முகமது மொஹ்சினை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம், “முகமது  மொஹ்சின் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி செயல்படவில்லை. அதாவது தேர்தல் ஆணையத்தின் சோதனை சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வீதியை  மொஹ்சின் மீறியுள்ளார். 

இதனால் தேர்தல் ஆணையம் தற்போது உள்ள ஆவணங்களை வைத்து  மொஹ்சினை இடைநீக்கம் செய்துள்ளது. தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் இவர் நீக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்த வாரத்தில் சாம்பல்பூரில் அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் ஹெலிகாப்டர்கள் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com