ஐந்து மாநில தேர்தல் கருத்துக்கணிப்புகள் - என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்?

ஐந்து மாநில தேர்தல் கருத்துக்கணிப்புகள் - என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்?

ஐந்து மாநில தேர்தல் கருத்துக்கணிப்புகள் - என்ன சொல்கிறார்கள் அரசியல் தலைவர்கள்?
Published on

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம்,தெலுங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ள நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் அடுத்த வருடம்  நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மொத்தம் உள்ள 88 தொகுதிகளில் முதற்கட்டமாக நவம்பர் 12ம் தேதி 18 தொகுதிகளிலும், நவம்பர் 20ம் தேதி மீதம் இருந்த 10 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது.

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் 28ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவிலும் நேற்று தேர்தல்கள் நடத்தப்பட்டது. தேர்தலின் முடிவுகள் வருகின்ற 11ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தேர்தலின் கருத்துக் கணிப்பு முடிவுகளை தற்போது ஊடகங்கள் வெளியிடத் தொடங்கியுள்ளன.

அதில், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் வெளியான கருத்துக் கணிப்பின் முடிவுகள் காங்கிரஸிற்கு சாதகமாக வந்துள்ளது. 119 தொகுதிகளைக் கொண்டுள்ள தெலுங்கானாவில் இம்முறையும் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தான் ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்து தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், ”இதை வைத்து ஏதும் கருத்து சொல்ல முடியாது. இன்னும் சில தினங்களில் முடிவு வந்துவிடும். பிறகு அதிமுக தனது கருத்தை கூறுவோம்” எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை பாஜக பணம் கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,“தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட பல கருத்துக்கணிப்புகள் பொய்யாகி உள்ளன. தேர்தல் முடிந்த பின்பு எடுக்கப்படும் கருத்துக்கணிப்புகள் பல இடங்களில் சரியாக இருந்துள்ளன. எனவே இந்த முறையும் அப்படி அமையும் என்று நான் நம்புகிறேன். இது பாஜகவிற்கு பின்னடைவாக அமையும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “ கருத்துக்கணிப்பு என்பது வேறு மனநிலையை உருவாக்கி வாக்கு இயந்திரத்தில் விளையாடுவது. இடைத்தேர்தல்களில் பாஜக தோற்று போகும். ஆனால் பொதுத்தேர்தலில் வெற்றி பெறும். திட்டமிட்டு ஏன் இடைத்தேர்தல்களில் பாஜக தோற்று போகிறது. ஏனென்றால் வாக்கு இயந்திரத்தை வைத்து வெற்றி பெற முடியும் என்றால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருப்போம் என கூறுவதற்காகவே” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com