ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ பதவிக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழகர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் 77.5 சதவித வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மின்னணு இயந்திரங்களுக்கு வைக்கப்பட்ட சீல் இன்று காலை 8 மணிக்கு உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் முன்னணி நிலவரம் தெரியவரும். பிற்பகலுக்குள் தேர்தல் முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.