ஜனநாயக கடமையாற்றிய அரசியல் கட்சித் தலைவர்கள்

ஜனநாயக கடமையாற்றிய அரசியல் கட்சித் தலைவர்கள்
ஜனநாயக கடமையாற்றிய அரசியல் கட்சித் தலைவர்கள்

சேலம் எடப்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். 

பெங்களூரில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார். புதுச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் நாராயணசாமி தனது வாக்கை பதிவு செய்தார். 

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு வாக்களித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார். கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார். 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஐஜேகே நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் வாக்களித்தார். இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் தனது வாக்கை பதிவு செய்தார். கோவையில் அமைச்சர் எஸ்பி வேலுமணி வாக்களித்தார். கரூரில் ஜோதி மணி வாக்களித்தார். உடல்நலம் குறைவாக இருந்த போதிலும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தனது வாக்கை பதிவு செய்தார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் எந்திரங்கள் பழுந்தடைந்துள்ளதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவரது மகள் ஸ்ருதிஹாசனுடன் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார். கிட்டதட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com