ரஜினியின் அரசியல் பிரவேசம்..?: அரசியல் தலைவர்கள் கருத்து

ரஜினியின் அரசியல் பிரவேசம்..?: அரசியல் தலைவர்கள் கருத்து
ரஜினியின் அரசியல் பிரவேசம்..?: அரசியல் தலைவர்கள் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக இன்று முதல் சந்தித்து வருகிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனிடையே, தனது அரசியல் நிலைப்பாடு பற்றி வரும் 31-ம் தேதி அறிவிப்பேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து பலரும் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் ஜெயக்குமார் (அதிமுக)

31-ஆம் தேதிதான் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என ரஜினி சொல்லியிருக்கிறார். இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஏற்பதும், ஏற்காததும் மக்களின் விருப்பம். மக்கள்தான் சிறந்த நீதிபதிகள். எனவே 31-ஆம் அவர் அறிவிப்பிற்கு பின் கருத்துகள் தெரிவிக்கலாம். 

டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக)

ரஜினி எந்தெந்த கொள்கைகளுக்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நினைக்கிறாரோ, அந்த அமைப்பை உருவாக்கிவிட்டு பின் அரசியலுக்கு வரட்டும். பின் அந்த அமைப்பு திராவிட இயக்கத்திற்கு சார்ந்த கொள்கையா.. அல்லது அதற்கு எதிரான கொள்கையாக என்பதை பார்த்து முடிவு செய்விட்டு கருத்து சொல்கிறோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com