சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்!

சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்!

சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள்: ரூ.53 கோடி செலவு செய்த அரசியல் கட்சிகள்!
Published on

மக்களவைத் தேர்தலையொட்டி ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இணையதளங்களில் அரசியல் கட்சிகள் சுமார் 53 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்துள்ளன. 

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. வரும் 23ம் தேதி நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் இறங்கின. குறிப்பாக இந்த தேர்தலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றின. 

சமூக வலைதளங்களுக்கென தனி பிரிவு உருவாக்கப்பட்டு பல கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை நடத்தின. போலி செய்திகள், தேர்தல் விதிமுறைகளை மீறிய செய்திகள் ஆகியவை வெளியாகக்கூடாது என்பதில் சமூக வலைதள நிறுவனங்களும் கவனமாக இருந்தன. ஆனால் அதையும் மீறி பல செய்திகள் பரப்பப்பட்டன. 

இந்நிலையில்  தேர்தலையொட்டி ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இணையதளங்களில் அரசியல் கட்சிகள் சுமார் 53 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தேர்தல் முடிவடைந்த மே மாதம் வரை ஃபேஸ்புக் மற்றும் கூகுள் இணையதளங்களில் அரசியல் கட்சிகள் அதிகளவு விளம்பரங்களைச் செய்துள்ளன. 

இதில்,  பாரதிய ஜனதா கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதற்காக 4 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவிட்டு முதலிடத்தில் உள்ளது. இதேபோல், கூகுளில் 17 கோடி ரூபாய் அளவிற்கு பாஜக விளம்பரங்கள் செய்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஃபேஸ்புக்கில் விளம்பரங்களுக்காக ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. கூகுளில் விளம்பரங்கள் செய்ததற்காக 2 கோடியே 71 லட்சம் ரூபாயை காங்கிரஸ் செலவிட்டுள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதற்காக ரூ.29.28 லட்சம் செலவு செய்துள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்ய 13.62 லட்ச ரூபாயும், கூகுளில் விளம்பரம் செய்ய 2.18 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com