\
சீருடையில்லாமல் இருசக்கர வாகனம் மறிப்பு : காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சீருடையில்லாமல் இருசக்கர வாகனம் மறிப்பு : காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சீருடையில்லாமல் இருசக்கர வாகனம் மறிப்பு : காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
Published on: 

மதுரையில் சீருடையில்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு தண்டனை வழங்கிய புகாரின் பேர் போலீஸ் ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கமலமுத்து. இவர் அருகே உள்ள பூதமங்கலம் பகுதிக்கு வழக்கு விசாரணைக்காக சீருடை அணியாமல் சென்றிருந்தார்.

அப்போது பொதுமுடக்க உத்தரவை மீறி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேரை நிறுத்தி தோப்புக்கரணம் போடச் சொல்லியுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சார்பு ஆய்வாளர் கமலமுத்துவை மதுரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com