வேதா நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் அவர் வாழ்ந்த வேதா நிலையம் ஜெயலலிதா நினைவு இல்லமாக ஆக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வேதா இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் இல்லம் நினைவில்லமாக அறிவிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை ஓபிஎஸ் அணியின் மஃபா பாண்டியராஜன் முழு மனதாக வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைதான் தாங்கள் கேட்டதாகவும் ஆனால் முதலமைச்சர் பழனிசாமி விசாரணை ஆணையம் அமைப்பதாகக் கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.