”காவல்துறை என்கிட்ட கெஞ்சினாங்க”: உதயநிதி ஸ்டாலின்
சட்டமன்றத் தேர்தலையொட்டி பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ‘பிரச்சாரம் செய்யாதீங்க. எங்களால முடியல’ என்று கெஞ்சினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, மேடையில் அவர் பேசும்போது, ”எனக்கு வரக்கூட்டத்தைப் பார்த்து பிரச்சாரம் செய்யவேண்டாம் என்று காவல்துறையினர் சொன்னார்கள். ஆனால், ’தலைவர் என்னை பிரச்சாரம் செய்யச்சொல்லிவிட்டார். உங்கக் கைது உங்க வழக்குக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். நான் கலைஞர் பேரன். சொன்னா சொன்னதுதான்’ என்றுக்கூறி பிரச்சாரத்தை தொடர்ந்தேன். தினமும் என்மீது வழக்கு தொடுத்தனர். தினமும் கைது செய்தனர். ஒருக்கட்டத்தில், ’தயவு செய்து பிரச்சாரம் செய்யாதீங்க. எங்களால முடியல. மத்தவங்க கைது பண்ணி விட்டா வீட்டுக்குப் போய்டுவாங்க. நீங்க விடிய விடிய பிரச்சாரம் பண்றீங்க. உங்கப் பின்னாடியே எங்களால சுத்திட்டிருக்க முடியல’ என்று காவல்துறையினர் என்னிடம் கெஞ்சினர் என்று கூறியுள்ளார்.