டிரெண்டிங்
கண்ணகி நகரில் பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் 2 பேர் மீது போலீசார் வழக்கு
கண்ணகி நகரில் பணம் பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் 2 பேர் மீது போலீசார் வழக்கு
கண்ணகி நகரில் அதிமுகவினர் வாக்கிற்கு பணம் பட்டுவாடா செய்த விவகாரத்தில் இருவர் மீது கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிகுட்பட்ட, கண்ணகி நகர், 10வது குறுக்கு தெருவில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருப்பதாக, திமுகவை சேர்ந்த ராஜா என்பவர் அதிமுகவை சேர்ந்த அந்தோணிராஜ் மற்றும் மாசிலாமணி இருவரை நேற்றைய தினம் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
அவர்களிடமிருந்து 1500 ரூபாய் பணம் பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், அவர்கள் இருவர் மீதும் கண்ணகி நகர் போலீசார் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.