திமுக போராட்டத்தில் வாக்குவாதம்: நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு

திமுக போராட்டத்தில் வாக்குவாதம்: நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு

திமுக போராட்டத்தில் வாக்குவாதம்: நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு
Published on

சென்னையில் திமுக மகளிரணி சார்பில் நடத்திய போராட்டத்திற்குள் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் நேற்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கனிமொழி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.

இதனிடையே திமுகவினர் போராட்டத்தின்போது, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையறிந்த காவல்துறையினர் அவர்களையும் கைது செய்தனர். இந்நிலையில், ஜெயலட்சுமி உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்கள் 11 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com