\
ஆ.ராசா, தயாநிதி, லியோனி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு

ஆ.ராசா, தயாநிதி, லியோனி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு

ஆ.ராசா, தயாநிதி, லியோனி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு
Published on

தேர்தல் பரப்புரையில் அவதூறாக பேசியதாக திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன் மற்றும் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆபாசமாகத் திட்டுதல், கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்வர் குறித்து தவறாக பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசா மீதும், பெண்கள் குறித்து திமுக எம்.பி தயாநிதி மற்றும் பேச்சாளர் லியோனி மீதும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com