தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதல் நாளே உதயநிதி ஸ்டாலின் கைது

தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதல் நாளே உதயநிதி ஸ்டாலின் கைது
தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதல் நாளே உதயநிதி ஸ்டாலின் கைது

அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். வரும் ஜனவரி 5 ஆம் தேதிமுதல் எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.1500 கூட்டங்களை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட ஆயத்தப்பணிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி விட்டார்.

அதன்படி இன்று திருக்குவளையில் முதல் பிரச்சாரத்தை உதயநிதி தொடங்கினார். அப்போது மேடையில் ஏறினால் கைது செய்வோம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்துகொள்ளுங்கள் என அவர் மேடையில் ஏறி பிரசாரத்தை ஆரம்பித்தார். பின்னர், அங்கு பேசிவிட்டு கீழே இறங்கும்போது போலீசார் உதயநிதியை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, கைது செய்தாலும் பிரசாரத்தை தொடருவோம் எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com