போக்சோ சட்டம் 18வயது பூர்த்தி ஆகாத ஆணுக்கும் பொருந்தும் - நீதிபதி கருத்து

போக்சோ சட்டம் 18வயது பூர்த்தி ஆகாத ஆணுக்கும் பொருந்தும் - நீதிபதி கருத்து
போக்சோ சட்டம் 18வயது பூர்த்தி ஆகாத ஆணுக்கும் பொருந்தும் - நீதிபதி கருத்து

போக்சோ சட்டப் பிரிவு பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. 18 வயது பூர்த்தி ஆகாத ஆண், பெண் குழந்தைகளுக்கும் பொருந்தும்  என்று நீதிபதி பரிமளா தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு, குழந்தைகளுக்கான நீதி குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு விருதுநகர் தனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைளுக்கு எதிரான குற்றப் பிரிவு எஸ்.பி.யும், போக்சோ சட்ட நோடல் அலுவலருமான கயல்விழி, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரிமளா, கூடுதல் எஸ்.பி. மாரிராஜன், கூடுதல் எஸ்.பி. கூத்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர். 

இந்நிகழ்ச்சியில் எஸ்.பி. கயல்விழி பேசுகையில், 18 வயது பூர்த்தி ஆகாத குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் வகைகள் மற்றும் அவற்றுக்கான தண்டணைகள் குறித்து விளக்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பாதுகாப்பு மற்றும் குற்றத்தில் ஈடுபட்டோருக்கு தண்டணை கிடைக்கும் வகையில் வழக்கை கையாள்வது குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியில், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரிமளா பேசுகையில், போக்சோ சட்டப் பிரிவு பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. 18 வயது பூர்த்தி ஆகாத ஆண், பெண் குழந்தைகளுக்கும் பொருந்தும். போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யும்போது அதை எஸ்.ஐ. அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரிகளே விசாரிக்க வேண்டும். வழக்குப் பதிவு செய்யும்போது குற்றத்திற்கான பிரிவை மட்டும் சேர்க்காமல் தண்டனைக்கு உரிய பிரிவையும் சேர்க்க வேண்டும் என்றார். 

நிகழ்ச்சியில், போக்சோ வழக்குப் பதிவு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை விதிகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பாகம் வெளியிட்டுள்ள கையேட்டை நீதிபதி பரிமளா, எஸ்.பி. கயல்விழி ஆகியோர் காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com