ராமதாஸ் குறித்து அவதூறு பேசுவதாக காடுவெட்டி குரு மகளின் பரப்புரைக்கு பாமகவினர் எதிர்ப்பு
அரக்கோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகையை பாமகவினர் சிலர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரத்தை நிறுத்தி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் திரும்பிச் சென்றார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காடுவெட்டி குரு மகள் விருத்தாம்பிகை அரக்கோணம் அடுத்த நெமிலி வட்டம் கரியாகுடல் எனும் இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தந்தைக்கு மருத்துவ உதவி செய்யாததால் தான் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பாமகவை சேர்ந்த சிலர் திடீரென பிரச்சார வாகனத்தில் முன்பு வாக்குவாதத்தில் செய்து கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக பலத்த பாதுகாப்புடன் பிரச்சாரத்தில் இருந்த காடுவெட்டி குரு மகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மேலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.