கருணாநிதியை சந்திக்கிறார் பிரதமர் மோடி

கருணாநிதியை சந்திக்கிறார் பிரதமர் மோடி

கருணாநிதியை சந்திக்கிறார் பிரதமர் மோடி
Published on

சென்னை வரும் பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கவுள்ளார். 

தினத்தந்தி நாளிதழின் பவளவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா மலரை வெளியிடுவதுடன், மோடி சிறப்புரையும் நிகழ்த்துகிறார். 

இந்த நிலையில், சென்னை வரும் பிரதமர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளளார். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் மதியம் 12.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com