\
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி சாமி தரிசனம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி சாமி தரிசனம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி சாமி தரிசனம்
Published on: 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மதுரை சுற்றுவட்ட சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், நாளை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதையொட்டி இன்று இரவு 8.30 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார் பிரதமர் மோடி. மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மீனாட்சியம்மன் கோயில் வந்து அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சீன அதிபரின் வருகையின்போது மாமல்லபுரத்தில் வேட்டி, சட்டையுடன் வந்தபிறகு தற்போது மீண்டும் பிரதமர் அதே உடையில் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com