தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டம்: தொடங்கி வைக்கிறார் மோடி?

தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டம்: தொடங்கி வைக்கிறார் மோடி?
தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டம்: தொடங்கி வைக்கிறார் மோடி?

தமிழக அரசின் மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 24ஆம் தேதி தொடங்கி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மற்றும் தமிழகம் வருகிறார். புதுச்சேரியில் சர்வதேச நகரமான ஆரோவில் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்கான பொன் விழாவில் பங்கேற்க மோடிக்கு, புதுவை அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பின் படி பிரதமர் வரும் 24ஆம் தேதி புதுவை வரவுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளும் அதே தினம் என்பதால், அன்றைய தினத்தில் தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 24ஆம் தேதி புதுவை வரும் மோடி, ஆரோவில் பொன்விழா நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் தொடக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com