சஷி கபூரின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பாட்ஷா நடிகர் சஷி கபூர் இன்று காலமானார். அவருக்கு வயது 79. நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் என இவருக்கு பல முகங்கள் சஷி கபூருக்கு உண்டு.
2011ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது அளித்து கெளரவித்தது. அது ஒரு ஆர்ட் ஃபில்ம். 2014 ஆம் ஆண்டு தாதா சாகிப் பால்கே விருதை பெற்றார். இவரது இழப்பு இந்திய சினிமாவுக்கு பெரிய இழப்பாகும்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். “சஷி கபூரின் பன்முகத் திறமையை அவருடைய திரைப்படங்களில் காண முடிந்தது. அவர் பெருமைக்கு உரிய ஆளுமை. அவர் திறமையான ஒரு நடிகர். வரவிருக்கும் தலைமுறையினர் அவரது அற்புதமான நடிப்பை நினைவு கூறுவர். அவரது இறப்புக்காக வருத்தப்படுகிறேன். அவரது குடும்பத்தினர் மற்றும் சினிமா ஆர்வலர்களுடன் எனது ஆழ்ந்த அஞ்சலியை பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.