சென்னை வந்தார் பிரதமர் மோடி: ஆளுநர், முதல்வர் வரவேற்பு

சென்னை வந்தார் பிரதமர் மோடி: ஆளுநர், முதல்வர் வரவேற்பு

சென்னை வந்தார் பிரதமர் மோடி: ஆளுநர், முதல்வர் வரவேற்பு
Published on

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமானநிலையம் வந்திறங்கிய பிரதமரை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வரவேற்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர்கள்  தமிழிசை, ஹெச்.ராஜா, இல.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு மோடி வந்தார். அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மோடியை வரவேற்றனர். ஐஎன்எஸ் தளத்தில் இருந்து கார் மூலம் விழா மண்டபத்திற்கு சென்றார். மோடி தினதந்தி பவளவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியையும் கோபாலபுர இல்லத்தில் சந்தித்து மோடி நலம் விசாரிக்கவுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com