
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த மோடியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அப்போது, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பிரதமருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர்.
பின்னர், கருணாநிதியை சந்தித்து மோடி நலம் விசாரித்தார். அப்போது, முரசொலி பவளவிழா மலரை கருணாநிதி மோடிக்குப் பரிசாக அளித்தார். இந்த சந்திப்பின் போது திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் பலர் கோபாலபுரம் இல்லம் முன்பு திரண்டிருந்தனர்.