\
அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் பிரதமர் மோடி ஆசி!

அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் பிரதமர் மோடி ஆசி!

அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் பிரதமர் மோடி ஆசி!
Published on

மக்களவைத் தேர்தலில் வென்று, பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோர் சென்றனர். அத்வானியின் காலைத் தொட்டு ஆசிபெற்ற பிரதமர் மோடி பின்னர் கட்சியை கட்டமைத்த மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி போன்றோர்களால் மட்டுமே, இத்தகைய வெற்றி சாத்தியமானதாக, அப்போது புகழாராம் சூட்டினார். 

இதனைத் தொடர்ந்து மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இல்லத்துக்கும் பிரதமர் மோடி சென்றார். சிறந்த கல்வியாளரை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது என்றும் முரளி மனோர் ஜோஷி போன்ற தலைவரால் நாட்டின் கல்விமுறையில் சிறந்த முன்னேற்றம் கிடைத்துள்ள தாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com