துளிர்க்கும் நம்பிக்கை: "மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை வேண்டும்" - உதவிக்கரம் கோரும் குரல்
"நான் கல்லூரி மாணவர். என் தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், தந்தை சித்தாள் வேலைக்கு செல்பவர். தற்போது கால்களில் அடிபட்டு வீட்டில் இருக்கிறார். கொரோனா ஊரடங்கால், பொருளாதார சிக்கலும் ஏற்பட்ட்டுள்ளது. எங்களுக்கு, பொருளாதார உதவி தேவை" – டொமினிக் சேவியர், சென்னை
"நான் கூலிவேலை செய்பவர். பொதுமுடக்கம் என்பதால், வேலையில்லை. என்னைப் போல, எங்கள் குழுவில் 7 பேர் இருக்கின்றனர். அன்றாட உணவுக்கு, மளிகை சாமான்கள் தேவை" – கோபால், தூத்துக்குடி
"நான் மாற்றுத்திறனாளி. பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிவந்தேன். இப்போது ஊரடங்கு நேரத்தில், வருமானமில்லை. கடையும் நஷ்டத்தில் சென்றுவிட்டது. வீட்டில் 4 பேர் இருக்கிறோம். இப்போது அடிப்படை தேவைக்கு, மளிகை சாமான்கள் தேவை" – அசோக்குமார், திருச்சி
"நான் முன்பு ஹவுஸ் கீப்பிங் சூப்பர்வைசர் வேலை பார்த்துவந்தேன். இப்போது, ஏதாவது வேலை வேண்டும். அதன்மூலம் வீட்டின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வேன்" – ரவிக்குமார், சென்னை
"நான் நாதஸ்வரக் கலைஞர். எங்கள் குழுவில், 5 பேர் இருக்கிறோம். தொழிலில் சிக்கல் இருப்பதால், எங்களுக்கு உணவுப்பொருட்கள் தேவை ஏற்பட்டுள்ளது" – ராஜரத்தினர், கரூர்
"எங்கள் பகுதியை சேர்ந்த, 60-80 மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள் உதவி தேவைப்படுகிறது" – மாரி, உத்திரமேரூர்
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.