ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் வராது

ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் வராது

ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் வராது
Published on

ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல் டீசல் வராது என தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

கண்ணதாசன் பிறந்தளை முன்னிட்டு சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பெஞ்சமின், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் ஆகியோர் இன்று காலை மலர்தூவி மரியாதை செய்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார். கச்சத் தீவை தாரை வார்த்தது திமுக தான் என்றும் அதனை மீட்க அதிமுக அரசு போராடி வருவதாகவும் தெரிவித்தார். மீனவர்களையும் அவர்கள் படகுகளையும் கைது செய்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்த அவர், ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் வரி வராது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com