ஜிஎஸ்டிக்குள் வர தமிழகம் எதிர்ப்பு - பொன்.ராதாகிருஷ்ணன்

ஜிஎஸ்டிக்குள் வர தமிழகம் எதிர்ப்பு - பொன்.ராதாகிருஷ்ணன்

ஜிஎஸ்டிக்குள் வர தமிழகம் எதிர்ப்பு - பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட கார்நாடகாவில் உள்ள காங்கிரஸ்-மதச்சார்பற்ற கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ள‌ர். கோவையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நீரை திறக்கும்படி கர்நாடகாவிடம் திமுக ஒருமுறைகூட கோரிக்கை விடுக்கவில்லை என்று சாடினார்.

எஸ்.வி.சேகர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்று பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், பயங்கரவாத சக்திகளைத் தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாகக் கூறினார். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்வதாகவும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com