டிரெண்டிங்
பெட்ரோல் வாங்குபவர்கள் ஒன்றும் பட்டினி கிடப்பவர்கள் அல்ல: மத்திய அமைச்சர்
பெட்ரோல் வாங்குபவர்கள் ஒன்றும் பட்டினி கிடப்பவர்கள் அல்ல: மத்திய அமைச்சர்
பெட்ரோல் வாங்குபவர்கள் ஒன்றும் பட்டினி கிடப்பவர்கள் அல்ல என்று மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணன்தனம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பதிலளித்த மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணன்தனம், வாங்கும் சக்தி உள்ளவர்கள் மட்டுமே பெட்ரோலை பயன்படுத்துவதாகவும், பெட்ரோல் வாங்குபவர்கள் ஒன்றும் பட்டினி கிடப்பவர்கள் அல்ல என்றும் பதிலளித்தார். பெட்ரோல் மீதான வரியில் கிடைக்கும் பணத்தை அரசு ஒன்றும் திருடி எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அந்தத் தொகை ஏழை எளிய மக்கள் கவுரவத்துடன் வாழ்வதற்கான நலத் திட்டங்களுக்கே பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.