ஓஹ்ஹ் இதுதான் Pa(w)rtner in Crime-ஆ? - மண்டைல இருந்த கொண்டைய மறந்த மொமன்ட் என்னன்னா?..

ஓஹ்ஹ் இதுதான் Pa(w)rtner in Crime-ஆ? - மண்டைல இருந்த கொண்டைய மறந்த மொமன்ட் என்னன்னா?..

ஓஹ்ஹ் இதுதான் Pa(w)rtner in Crime-ஆ? - மண்டைல இருந்த கொண்டைய மறந்த மொமன்ட் என்னன்னா?..
Published on

மனிதர்களோடு ஒட்டும் உறவுமாக இருக்கும் முதன்மையான செல்லப்பிராணியாக இருப்பது நாய்களே. உலகளவில் வீடுகளில் நாய் வளர்க்கும் வழக்கம் எல்லாரிடத்திலும் இருக்கும். நாய்களை வைத்து அதன் உரிமையாளர்கள் செய்யும் சேட்டையாகட்டும், நாய்கள் செய்யும் சேட்டையாகட்டும் எப்போதும் இணையவாசிகளை கவர தவறுவதே இல்லை.

அந்த வகையிலான ஒரு வீடியோதான் நெட்டிசன்களிடையே செம்ம வைரலாக பரவி வருகிறது. அதன்படி, வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாததால் வளர்ப்பு நாயும், குட்டி சிறுமியும் ஹாலில் ஹாயாக உட்கார்ந்து டிவி பார்த்து வந்திருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வளர்ப்பு நாய் சிறுமியிடம் சிக்னல் கொடுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்த அந்த குட்டிப் பெண் வேகவேகமாக வந்து டிவியை ஆஃப் செய்துவிட்டு வீட்டுப்பாடம் எழுத செல்கிறார்.

பிறகுதான் தெரிகிறது சிறுமி மற்றும் நாயின் அப்பா வந்ததால் இந்த நாடகத்தை கனகச்சிதமாக நடத்தியிருக்கிறார்கள். இந்த வீடியோதான் Yog என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு Pawtner in Crime என கேப்ஷன் இடப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள், “மெனக்கெட்டு நோட்டம் விட்டு நாடகமாடிய நாயும் சிறுமியும் வீட்டில் சிசிடிவி இருந்ததை மறந்துவிட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com