\
தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கம்

தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கம்

தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கம்
Published on

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பளிக்காத காரணத்தால், அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உணடாகும் விதத்தில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும் ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com