பெரியார் சிலை விவகாரம்: பாஜக மேலிடம் கடும் கண்டனம்

பெரியார் சிலை விவகாரம்: பாஜக மேலிடம் கடும் கண்டனம்
பெரியார் சிலை விவகாரம்: பாஜக மேலிடம் கடும் கண்டனம்

பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் செயல் கண்டிக்கத்தக்கது என பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது குறித்து ஹெச்.ராஜா நேற்று தனது முகநூல் பதிவில், “லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு ? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். .இன்று திரிபுராவில் லெனின் சிலை.. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை” என்ற கருத்தினை பதிவிட்டிருந்தார். பின்னர் அதனை நீக்கிவிட்டார்.

இந்நிலையில் பெரியார் சிலை அகற்றப்படும் என்ற பதிவை என் அனுமதி இல்லாமல் அட்மின் முகநூலில் பதிவு செய்துவிட்டார் என ஹெச்.ராஜா விளக்கம் கொடுத்துள்ளார். இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் செயல் கண்டிக்கத்தக்கது என பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெரியார் போன்ற பெரிய தலைவர்களை அவமதிப்பு செய்வதையும், சிலைகளை இடிப்போம் என்ற மரியாதை குறைவான கருத்துகளையும் பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com