\
நரிக்குறவ சமூகத்தினருடன் நடனமாடி வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன்

நரிக்குறவ சமூகத்தினருடன் நடனமாடி வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன்

நரிக்குறவ சமூகத்தினருடன் நடனமாடி வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன்
Published on

பெரம்பலூர் அருகே அதிமுக வேட்பாளர் இளம்பைதமிழ்ச்செல்வன் நரிக்குறவர் சமூகத்தினருடன் சேர்ந்து நடனமாடி வாக்குசேகரித்த சம்பவம் மக்களை கவர்ந்தது.

பெரம்பலூர் தனித்தொகுதியில் அதிமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். அதன்படி இன்று அவர் சின்னாறு, எறையூர், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரித்தார். தொடர்ந்து அவர் நறிக்குறவர் காலனியில் வாக்குசேகரித்தார். அங்கு இளம்பை தமிழ்ச்செல்வனுக்கு நரிக்குறவர் சமூகத்தினர்கள் சார்பில் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நரிக்குறவ மக்களுடன் உற்சாகமாக உரையாடிய இளம்பை தமிழ்ச்செல்வன் , நறிக்குறவர் தம்பதியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பெண் குழந்தைக்கு ஜெயஸ்ரீ என்று பெயர் சூட்டினார்.பின்னர் நறிக்குறவ மக்களுடன் சேர்ந்து தப்பாட்ட இசைக்கு ஏற்ப நடனமாடி அசத்தி  வாக்குசேகரித்தார்.உற்சாக மிகுதியில் அதிமுக வேட்பாளர் இளம்பைதமிச்செல்வனும் நரிக்குறவ மக்களும் சேர்ந்து நடனமாடியது அங்கிருந்தவர்களை பெரிதும் கவர்ந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com