வேலை கேட்டுவந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள்... 8 பெண்கள் மீட்பு

வேலை கேட்டுவந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள்... 8 பெண்கள் மீட்பு
வேலை கேட்டுவந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள்... 8 பெண்கள் மீட்பு
Published on

சென்னையில் வேலை கேட்டுவந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து கானத்தூர் ஆய்வாளர் வேலு தலைமையில் பெண்கள் அடங்கிய காவல் துறையினர் பனையூரில் செயல்பட்டு வரும் OYO your dreams family Resort ல் சோதனை செய்தனர். அப்போது அங்கு 3 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களை விசாரணை செய்ததில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த பெண்கள் என்பதும் மேலும் சில பெண்களை கோவளத்தில் SM Palace என்ற தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த விடுதியின் உரிமையாளரான செந்தில்குமார் என்பவர் தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து வந்து தங்களுடைய சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததுள்ளனர் என தெரிவித்தனர்.

மகேந்திரன் மற்றும் சிவக்குமார் என்ற இடைத்தரகர்கள் மூலம் பெண்களின் போட்டோக்களை ஆன்லைன் மூலம் அனுப்பி கட்டண தொகையாக 10000 முதல் 20000 வரை நிர்ணயித்து விருப்பம் உள்ள நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக பணம் செலுத்திய பின்னர் பனையூரில் உள்ள சொகுசு விடுதியான OYO your dreams family Resort க்கு சொகுசு கார்கள் மூலம் அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் தெரியவந்தது.

இதை அறிந்த தனிப்படையினர் பனையூர் OYO your dreams family Resort ன் மேலாளர் பாபு, இடைத்தரகர் சதீஸ் மற்றும் ஓட்டுநர் திலீப் ஆகியோரை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக கோவளம் விடுதியில் இருந்த 5 பெண்களையும் மீட்டனர். மேலும் அங்கு இருந்த இடைத்தரகர்களான மகேந்திரன், சிவக்குமார், சரவணன் ஆகியோரையும் விடுதி உரிமையாளரான செந்தில் குமார் என்பவரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய சொகுசு கார்கள் மற்றும் செல்போன்களை கைப்பற்றினர். வேலை கேட்டுவரும் பெண்களை கட்டாயப்படுத்தி ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடத்திவந்த கும்பலை கைதுசெய்த, கானத்தூர் ஆய்வாளர் வேலு உள்ளிட்ட போலீசாரை காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com