\
மக்கள் பிரச்னைகளுக்கு அடக்குமுறை மூலம் தீர்வு காண்பதா?: முத்தரசன் கண்டனம்

மக்கள் பிரச்னைகளுக்கு அடக்குமுறை மூலம் தீர்வு காண்பதா?: முத்தரசன் கண்டனம்

மக்கள் பிரச்னைகளுக்கு அடக்குமுறை மூலம் தீர்வு காண்பதா?: முத்தரசன் கண்டனம்
Published on

மக்கள் பிரச்னைகளை தீர்க்க முன்வராத மத்திய, மாநில அரசுகள் அடக்குமுறை மூலம் தீர்வுகாண முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்த‌ரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது மிகக்கடுமையான அடக்குமுறைகளை மேற்கொள்வதுடன், குண்டர் சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதா‌கவும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். அரசின் ஜனநாயக விரோத அடக்குமுறை நடவடிக்கை மூலம் தீர்வு காண இயலாது என்றும், அடக்குமுறை நடவடிக்கையை கைவிட்டு மலைபோல் குவிந்துள்ள மக்கள் பிரச்னைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் எனவும் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com