எம்எல்ஏவை முற்றுகையிட்ட கிராம மக்கள்: இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

எம்எல்ஏவை முற்றுகையிட்ட கிராம மக்கள்: இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
எம்எல்ஏவை முற்றுகையிட்ட கிராம மக்கள்: இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் எம்.எல்.ஏவை முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சர்க்கரைசெட்டிபட்டி கிராமத்தில் அரசின் நலத்திட்ட பணிகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது அங்கே வந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் சட்டமன்ற  உறுப்பினரை முற்றுகையிட்டனர்.

ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி தொகை பெற்றுத்தர வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், நூறு நாள் திட்ட பணிகள் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பசுமை வீடுகள் வழங்க வேண்டும், தனிநபர் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், அந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைவரும் தங்களது கோரிக்கைகளை முறையாக எழுதி மனுவாக கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து அனைவரும் கோரிக்கை மனுக்களை கொடுத்துவிட்டு பின்னர் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com