ஓபிஎஸ் தோட்டத்தை முற்றுகையிட்டவர்கள் கைது

ஓபிஎஸ் தோட்டத்தை முற்றுகையிட்டவர்கள் கைது

ஓபிஎஸ் தோட்டத்தை முற்றுகையிட்டவர்கள் கைது
Published on

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான தோட்டத்தை முற்றுகையிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு 200 அடி ஆழ ராட்சத கிணறுகளால், ஊர் பொதுக்கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொதுக்கிணற்றில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறும் மக்கள் உடனடியாக ராட்சத கிணறுகளை மூட கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான தோட்டத்தை இன்று முற்றுகையிட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறை வாகனத்தையும் மக்கள் முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈட‌பட்டவர்களை கைது செய்து அங்கிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். கூட்டத்தை கட்டுப்படுத்த லட்சுமிபுரத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com