"அடிப்படை வசதிகள்... மக்கள் கண்களில் கண்ணீர்!" - ரோகிணி உருக்கம்

"அடிப்படை வசதிகள்... மக்கள் கண்களில் கண்ணீர்!" - ரோகிணி உருக்கம்

"அடிப்படை வசதிகள்... மக்கள் கண்களில் கண்ணீர்!" - ரோகிணி உருக்கம்
Published on

"அடிப்படை வசதிகள் பற்றி பேசும்போது மக்கள் கண்களில் கண்ணீர் வருகிறது" என்று தேர்தல் பரப்புரையில் உருக்கமான பேசினார் நடிகை ரோகிணி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து கோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதியில் நடிகை ரோகிணி பிரச்சாரம் மேற்கொண்டபோது, ”தேர்தல் களத்தில் நிறைய பேர் பிரசாரத்திற்கு வந்திருக்கிறார்கள். வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். அதில், சாத்தியப்படக்கூடிய வாக்குறுதிகளைத்தான் பார்க்க வேண்டும்.

பல கிராமங்களில் இன்னமும் அடிப்படை வசதிகள் இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்பதுதான் முக்கிய குறையாக இருக்கிறது. கோவில்பட்டி கயத்தார் பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது. தற்போது நடவடிக்கை எடுப்பவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக அதனைச் செய்திருக்கலாம். கோவில்பட்டி இரண்டாவது குடிநீர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கலாம். இங்கு இருக்கும் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரைவில்லை. காற்றுதான் வருகிறது. பொதுமக்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையில்தான் இருக்கின்றனர்.

பாஜக கொண்டு வந்துள்ள மக்களுக்கு எதிரான திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கிறது அதிமுக அரசு. மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திற்கும் துணைபோய்க் கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால் ரயில்வே, மின்வாரியத்தில் ஒரு தமிழர்கள் கூட வேலைக்கு எடுக்கவில்லை. இதனை செய்தது மத்திய அரசு. ஆனால் மாநில அரசு இதனை வலியுறுத்த தவறிவிட்டது.

அடிப்படை வசதிகள் பற்றி பேசும்போது மக்கள் கண்களில் கண்ணீர் வருகிறது. இதெல்லாம் நடக்கவில்லை என்ற உண்மை தெரிகிறது. இதையெல்லாம் சரிப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்றார் நடிகை ரோகிணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com