”கட்சிக்காக உழைத்த என்னை எச்சில் இலைபோல் தூக்கி எறிவது ஏன்?” - கலங்கிய தோப்பு வெங்கடாசலம்

”கட்சிக்காக உழைத்த என்னை எச்சில் இலைபோல் தூக்கி எறிவது ஏன்?” - கலங்கிய தோப்பு வெங்கடாசலம்

”கட்சிக்காக உழைத்த என்னை எச்சில் இலைபோல் தூக்கி எறிவது ஏன்?” - கலங்கிய தோப்பு வெங்கடாசலம்
Published on

அதிமுக முன்னேற்றத்திற்கு தன்னால் எந்த தடையும் வராது என பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

ஈரோடு பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் பெருந்துறையில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம், "இந்த இயக்கத்திற்காக 8 முறை சிறை சென்றவன். ஆட்சிக்கு வருவது அதிகாரம் செய்ய அல்ல. மக்களுக்கு சேவை செய்யவே என என் மனதில் நிறுத்தியுள்ளேன்.

கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க தோளோடு தோளாக நின்றோம். அதற்கு பதிலாக மாவட்ட செயலாளர் பதவி தருவதாக முதல்வர் சொன்னார். ஆனால் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய நேரம் கனிந்தால் அமைச்சர் பதவி தாருங்கள் என்றேன். கட்சியின் மீதும், தலைமை மீதும் நம்பிக்கை இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிக ஒட்டு வாங்கி தந்தது தவறா?. எனக்கு யாரிடமும் தனிப்பட்ட பகை கிடையாது.. என் குடும்பத்திற்கு பதவி கேட்கவில்லை. பணி ஒப்பந்தம் கேட்கவில்லை. அமைச்சர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுகளில் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஜெயக்குமார் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வேலை செய்தவர். இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலிலும் தற்போதைய அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் அதிமுகவுக்கு எதிராக களத்தில் போட்டியிட்டவர். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை பலர் தடுத்தும் முதல்வர் காலில் விழுந்து இத்திட்டத்தை கொண்டு வந்தேன். இத்திட்டதை தடுக்க முயற்சித்தவர்களுடன் கூட்டு சேர்ந்தவர் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்.

முதல்வர், துணை முதல்வரை அம்மா இடத்தில் தான் வைத்து பார்க்கிறோம். அறிவிக்கும் வேட்பாளர் தலைமைக்கும் கட்சிக்கும் பொது மக்களுக்கும் எதிராக இருப்பவரை அறிவித்து உள்ளனர். கட்சியின் விதிப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தவர் 5 ஆண்டுகள் எந்தவித பதவியும் கொடுக்கக்கூடாது. 10 ஆண்டு காலம் உழைத்த என்னை எச்சி இலைபோல் தூக்கி எறிய என்ன காரணம். நான் என்ன தவறு செய்தேன்.

அம்மா ஆட்சி அமைப்போம் என்கின்ற தாங்கள் 10 ஆண்டு காலம் உழைத்த எங்களை போன்ற அதிமுகவினரை ஏன் மதிக்கவில்லை. அதிமுக தலைமைக்கு கட்டுப்படுவேன். என்றைக்கும் எம.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு விசுவாசி என கூறியவர் தொண்டர்கள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுதார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தோப்பு வெங்கடாசலம், தேர்தல் நேரத்தில் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. அதிமுகவினால் கிடைத்த பெரிய பதவிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்த விரும்பவில்லை. எனக்கு சீட் தாரத காரணத்தால் அதிமுக ஆட்சிக்கு வரும் என்றால் எனக்கு சந்தோசம் தான். அதிமுக முன்னேற்றத்திற்கு என்னால் எந்த தடையும் வராது. அதிமுக ஆட்சி அமைவதே முக்கியம். இயக்கம் பெரியதா? என் பதவி பெரிதா? என்றால் எனக்கு இயக்கம் பெரிது. அதிமுக இயக்கம் நல்ல பாதையில் செல்ல வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். சுற்றுசூழல் துறை அமைச்சர் தொகுதியில் நான் தலையிட்டதே கிடையாது. எனக்கும் அமைச்சருக்கும் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. பெருந்துறையில அதிமுக வெற்றிபெற வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் மக்கள் விருப்பம் என்னவென்று தெரியவில்லை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com