“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா?” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி

“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா?” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி
“என் தந்தையின் பெயரை அரசியலுக்காக பயன்படுத்துவதா?” - சரத் பவாருக்கு பாரிக்கர் மகன் கேள்வி

தன் தந்தையின் பெயரை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதா என்று மனோகர் பாரிக்கரின் மகன் சரத் பவாருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஃபேல் விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ரஃபேல் குறித்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரஃபேல் விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. எதிர்கட்சிகள் ரஃபேல் ஊழலை கூறி பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. 

அந்த வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், “ரஃபேல் விவகாரத்தின் காரணமாக தான் பாரிக்கர் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சரத் பவாருக்கு பதிலளிக்கும் விதமாக பாரிக்கரின் மகன் உட்பால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “என்னுடைய தந்தையின் பெயர் அரசியல் காரணங்களுக்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சரத் பவார் மாதிரியான மூத்த தலைவரிடமிருந்து நாட்டு மக்கள் இத்தகையை கருத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்னுடைய தந்தை உயிருடன் இருந்தப்போது இதுபோன்று அரசியல் காரணங்களுக்காக அவரது பெயரை கூறிய போது அவர் தகுந்த பதிலடி கொடுத்தார். 

தற்போது அவர் உயிருடன் இல்லை. அனைவரும் எளிதில் அவரது பெயரை வைத்து அரசியல் செய்ய தொடங்கிவிட்டனர். நான் ஒன்றை மட்டும் தெளிவுப் படுத்த விரும்பிகிறேன். என் தந்தை மிகவும் நேர்மையான மனிதர். அவர் நாட்டின் நலனுக்காக தான் எப்போதும் உழைத்தார். மேலும் அவர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தப் போது பல முக்கியமான முடிவுகளை எடுத்தார். அதில் ஒன்றுதான் ரஃபேல் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் முக்கிய பங்கும் ஆற்றினார். 

அதன்பின்னர் கோவா மக்கள் அவர் இங்கு வந்து பணியாற்ற வேண்டும் என அழைத்ததற்கு இணங்க அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அந்தப் பணியில் அவரது கடைசி மூச்சு வரை தொடர்ந்தார். இதனால் அவர் ரஃபேல் விவகாரத்தினால் தான் கோவா முதல்வராக வந்தார் எனக் கூறுவது அவரையும் கோவா மக்களையும் அவமான படுத்துவதற்கு சமம்”எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com