”நந்திகிராமில் உள்ளூர் மக்கள் வாக்களிப்பதை துணை ராணுவப்படையினர் தடுக்கிறார்கள்” : மம்தா

”நந்திகிராமில் உள்ளூர் மக்கள் வாக்களிப்பதை துணை ராணுவப்படையினர் தடுக்கிறார்கள்” : மம்தா

”நந்திகிராமில் உள்ளூர் மக்கள் வாக்களிப்பதை துணை ராணுவப்படையினர் தடுக்கிறார்கள்” : மம்தா
Published on

தாம் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் உள்ளூர் மக்கள் வாக்களிப்பதை துணை ராணுவப்படையினர் தடுப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றசாட்டியுள்ளார்.

மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் உள்ளிட்ட 30 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தங்கருடன் தொலைபேசியில் நந்திகிராமில் ஒரு வாக்குச் சாவடியிலிருந்து பேசினார்.

அப்போது அவர், “துணை ராணுவப்படையினர் உள்ளூர் மக்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. காலையிலிருந்து நான் பிரச்சாரம் செய்கிறேன். இப்போது நான் உங்களிடம் முறையிடுகிறேன், தயவுசெய்து பாருங்கள் " என தெரிவித்தார். மேலும் வெளிமாநில ரவுடிகளுக்கு துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு அளிப்பதாகவும் மம்தா குற்றம்சாட்டினார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a>: West Bengal CM Mamata Banerjee speaks to Governor Jagdeep Dhankhar over the phone at a polling booth in Nandigram. She says, &quot;...They didn&#39;t allow the local people to cast their vote. From morning I am campaigning...Now I am appealing to you, please see...&quot; <a href="https://t.co/mjsNQx38BB">pic.twitter.com/mjsNQx38BB</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1377550102554763266?ref_src=twsrc%5Etfw">April 1, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com