\
மக்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

மக்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

மக்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
Published on

தொடர் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததற்காக, 26 அதிமுக எம்பிக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவை, மாநிலங்களவையில் மேகதாது அணை பிரச்னையை எழுப்பி அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் ரஃபேல் பிரச்னை குறித்து ராகுல் காந்தி பேசும் போதும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

அதிமுக எம்பிக்களில் கடும் அமளியால் மக்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை நடவடிக்கையில் போது யாரோ ஒரு எம்பி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது பேப்பரினை தூக்கி தெரிந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, அதிமுக எம்.பி.க்கள் 26 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அவையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மக்களவையில் இருந்து அடுத்த 5 அமர்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

மேகதாது விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com