தினகரன் கொடுத்த பதவி தேவையில்லை: பண்ருட்டி எம்.எல்.ஏ பகீர்!
கட்சியில் அங்கீகாரம் இல்லாத டிடிவி தினகரன் அளித்த மகளிர் அணி இணை செயலாளர் பதவி தேவையில்லை என பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியில் 18 அமைப்புச் செயலாளர்கள் உட்பட புதிய நிர்வாகிகளை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏக்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், எஸ்.டி.கே ஜக்கையன் உள்ளிட்ட 18 பேர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புரட்சி தலைவி அம்மா பேரவைக்கு 8 இணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீனவர் பிரிவு, விவசாய பிரிவுக்கு இணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கட்சியில் அங்கீகாரம் இல்லாத டிடிவி தினகரன் அளித்த மகளிர் அணி இணை செயலாளர் பதவி தேவையில்லை என பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் செயல்படப்போவதாகவும், கடலூரில் 4 எம்எல்ஏக்கள், 2 எம்.பிக்கள் முதலமைச்சருக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.