டிரெண்டிங்
இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்
இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்
சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை டெல்லியில் நடைபெற்றது. இதற்காக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது.” என்றார். பின்னர் பரோலில் வரும் சசிகலாவை சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்காமல் சிரித்துக் கொண்டே கை கூப்பி நன்றி எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட மற்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் நன்றி எனக்கூறி சென்றுவிட்டார்.