\
அமைச்சர்களுடன் மாஃபா பாண்டியராஜன் முக்கிய ஆலோசனை: அதிமுக அணிகள் இணைகிறதா?

அமைச்சர்களுடன் மாஃபா பாண்டியராஜன் முக்கிய ஆலோசனை: அதிமுக அணிகள் இணைகிறதா?

அமைச்சர்களுடன் மாஃபா பாண்டியராஜன் முக்கிய ஆலோசனை: அதிமுக அணிகள் இணைகிறதா?
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பென்ஜமின் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பென்ஜமின் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். சாமி தரிசனம் செய்து ஒரே பந்தியில் உணவருந்திய அவர்கள், ஆலய செயல் அலுவலர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசினர்.

இதில், அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையே பிரதானமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதிமுகவில் பிளவுபட்ட அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது அரசியலில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மாஃபா பாண்டியராஜன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தினால் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com