புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறதா பாமக?

புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறதா பாமக?

புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறதா பாமக?
Published on

புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலக அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் பாமகவுக்கு தொகுதிகள் அறிவிக்கப்படாததால் அக்கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை நடத்திகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி கவுண்டம்பாளையத்திலுள்ள வன்னியர்சங்க அலுவலகத்தில் பாமக ஆலோசனை நடத்திவருகிறது.

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸுடன், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளன. இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாததால் விலகுவதாக தெரிகிறது.

இதனிடையே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கான கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com