\
“1000 ரூபாய் நோட்டு போன்று முதல்வர் பழனிசாமியை செல்லாக்காசாக ஆக்க வேண்டும்” - உதயநிதி

“1000 ரூபாய் நோட்டு போன்று முதல்வர் பழனிசாமியை செல்லாக்காசாக ஆக்க வேண்டும்” - உதயநிதி

“1000 ரூபாய் நோட்டு போன்று முதல்வர் பழனிசாமியை செல்லாக்காசாக ஆக்க வேண்டும்” - உதயநிதி
Published on

ஆயிரம் ரூபாய் நோட்டு போன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை செல்லாக்காசாக ஆக்க வேண்டும் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தற்போது திமுக வேட்பாளருமான வில்வநாதனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், “3 ஆண்டுகளுக்கு முன்பு மோடி என்ன செய்தார். பணமதிப்பிழப்பு என்று சொல்லி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். புதிய இந்தியா பிறக்கப் போகிறது என காரணம் சொன்னார். பிறந்ததா? லட்சக்கணக்கான பேர் ஏடிஎம் வாசலிலும் வெயிலிலும் நின்று தன் சொந்தப் பணத்தை எடுக்கப் போய் ஆயிரக்கணக்கானோர் இறந்துபோனார்கள்” என்றார்.

அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் செல்லாத 1000 ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு பிரசார வாகனத்தை முன்பு ஓடினார். அதை வாங்கிக்கொண்ட உதயநிதி, “இந்த காசு செல்லாது. இதேப்போன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை செல்லாக்காசாக ஆக்கவேண்டும்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com