சமபந்தி விருந்தில் மக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பழனிசாமி

சமபந்தி விருந்தில் மக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பழனிசாமி

சமபந்தி விருந்தில் மக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை கே.கே நகர் சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுடன் மக்களாக பங்கேற்றார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை கே.கே.நகரில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் சமபந்தி பொது விருந்து நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மக்களோடு மக்களாக அமர்ந்து உணவருந்தினார். இதேபோல் ராயப்பேட்டை விநாயகர் கோயிலில் நடைபெற்ற விருந்தில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். செங்கோட்டையன், தங்கமணி, உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்களும் சமபந்தி விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இதற்கிடையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற விருந்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அவருக்கு மட்டும் தனி இருக்கை போடப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, இதுகுறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தான் கேட்கவேண்டும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com