பழனி: செல்போன் டவரில் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை

பழனி: செல்போன் டவரில் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை
பழனி: செல்போன் டவரில் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை

பழனியில் பி.எஸ்.என்.எல். அலுவலக செல்போன் டவரில் ஒருவர் தூக்குமாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி காந்தி ரோட்டில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பழனி நகரின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்திருக்கும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை காரணமாக இன்று பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள செல்போன் டவரில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தூக்கில் தொங்கிய நபரின் உடலை கீழே இறக்கி சோதனை செய்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் முருகன் (40) என்பதும், தாராபுரம் அருகே உள்ள பொன்னாபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 120அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி நபர் ஒருவர் தூக்கில் தொங்கியுள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் காவலாளி மற்றும் சிசிடிவி கேமராக்கள் என எதுவும் இல்லாததால் போலீசார் விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பூட்டியிருந்த பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நுழைந்த ஒருவர் செல்போன் டவரில் தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com