பராசக்தி திரைப்படம் தற்போது வந்தால்... ப.சிதம்பரம் கருத்து
பராசக்தி திரைப்படம் தற்போது வந்தால் அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மெர்சல் திரைப்படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி பற்றி நடிகர் விஜய் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இதற்கு தமிழக பாஜக மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜகவின் எதிர்ப்பைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார். இது நாடு முழுவதும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் அரசின் கொள்கைகளை பாராட்டும் வகையில் மட்டுமே படங்களை எடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம் என, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பாரதிய ஜனதாவை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மெர்சல் படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டும் என பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள் கூறி வருவதை சுட்டிக்காட்டியுள்ள சிதம்பரம், இந்த கால கட்டத்தில் பராசக்தி திரைப்படம் வந்தால் அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் எனவும் கூறியுள்ளார்.